புதிய கண்டுப்பிடிப்பாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் திட்டம் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 நிலமையை கட்டுப்படுத்தும் செயற்பாட்டின் மூலம் நூற்றுக்கணக்கான படைப்புக்களை காணக்கூடியதாக இருந்தது என சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார சேவைகள் அதிகாரமளித்தல் திட்டத்தில் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.
இவ்வாறான புதிய கண்டுப்பிடிப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்து சுகாதார சேவைக்கு அதிகமான உள்ளுர் தயாரிப்புக்களை வழங்குவதற்கும் சுகாதார அமைச்சு திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0112 680 549 அல்லது 0718 123 858 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.