fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தென்கொரியாவுடனான அனைத்து தொடர்பாடல் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதாக வடகொரியா அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 9, 2020 13:44

தென்கொரியாவுடனான அனைத்து தொடர்பாடல் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதாக வடகொரியா அறிவிப்பு

தென்கொரியாவுடனான அனைத்து தொடர்பாடல் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதாக வடகொரியா அறிவித்துள்ளது. இதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமை வெளிப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடகொரியாவின் எல்லைப்பகுதியிலுள்ள கஷோங் நகரிலிருந்து மேற்கொள்ளப்படும் அழைப்புக்கள் நேற்றிரவு முதல் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2018 ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் அலுவலகம் ஒன்று ஸ்த்தாபிக்கப்பட்டது. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த அலுவலக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு தொலைபேசி ஊடக தொடர்புகள் பேணப்பட்டு வந்தன. இந்நிலையில் தென்கொரியாவுடன் அனைத்து தொடர்பாடல் எல்லைகளையும் இடைநிறுத்துவதாக வடகொரியா அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 9, 2020 13:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க