போக்குவரத்து சேவைகள் இன்ற முதல் வழமை போன்று இடம்பெறுகின்றன பஸ் வண்டிகளுகான வழித்தட மருங்கு நடைமுறை சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வாகன நெரிசலை குறைப்பதற்காக வழித்தட மருங்கு நடைமுறைச்சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலைமைகளுடன் மருங்கு நடைமுறைச்சட்டம் அமுல்பமுடுத்தப்படவில்லை எனினும் இன்று முதல் குறித்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
காலை 6.00 மணி மதல் முற்பகல் 9.00 மணி வரை மொரட்டுவை சிலுவைச்சந்தியில் இருந்து கொழும்பு வரையும் பிற்பகல் 4.00 மணில் இருந்து இரவு 7.00 மணிவரை கொழும்பில் இருந்து மொரட்டுவை வரையும் வழித்தட மருங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சிசி வெல்கம கெமரட்டுவை பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து நடைமுறை தொடர்பான திட்டங்களை வழங்கும் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் அமல் குமாரகே உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.