பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அரசியலில் தன்னை அர்ப்பணித்து 50 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. இந்நிலையில் சுயாதீன தொலைக்காட்சி மற்றும் வசந்தம் தொலைக்காட்சியில் பிரதமர் பங்கேற்ற விசேட கலந்துறையாடல் நேற்று இடம்பெற்றது. சுயாதீன தொலைக்காட்சியின் 41 ஆவது ஆண்டு நிறைவுக்கு இணைவாகவும் குறித்த கலந்துரையாடல் ஒழுங்கு செய்யபப்பட்டிருந்தது.
சுயாதீன தொலைக்காட்சியின் விக்ரமசிங்கபுர பிரதான காரியாலய வளாகத்திற்கு வருகை தந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிறுவன தரைவர் சுதத் ரோஹன பிரதம நிறைவேற்று அதிகாரி நளின் குமார நிஸ்ஸங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் முகாமைத்துவத்தினரால் மகத்தான வரவேற்ற வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிரதமரின் 50 வருட அரசியல் பூர்த்தி மற்றும் சுயாதீன தொலைக்காட்சியின் 41 வருட பூர்த்தியை நினைவுக்கூறும் வகையில் கேக் வெட்டப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானயக்காரவும் குறித்த நிகழ்வில் இணைந்திருந்தார்
இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்:
[ot-video type=”youtube” url=”https://youtu.be/IAF7SLTBFgY”]
கடந்த அரசாங்கத்தை போன்று தற்போதைய அரசாங்கம் அரசியல் பழி வாங்கள்களை மேற்கொள்ளாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.