உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென இசை நிகழ்ச்சிகள் : தாய்லாந்து
Related Articles
கொவிட் 19 தொற்றினால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தாய்லாந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய ஊரடங்கால் வீடுகளில் தங்கியுள்ள மக்களுக்கென இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல் அந்நாட்டில் ஊரடங்கு அமுலில் உள்ளது.
சமூக விலகல் கட்டாயமாக கடைப்பிடிக்கப்படுவதால் மக்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறிய குழுக்களாக இணைந்து இசை நிகழ்ச்சிகளை வழங்க தாய்லாந்து அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்தவேண்டுமென இசைக்குழுக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.