நினைவூட்டல் : “முகக்கவசம் இன்றி பயணிக்க அனுமதி இல்லை”
Related Articles
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார வழிமுறைகளையும் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பஸ் மற்றும் ரயில்வே நிலையங்களில் கை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சகல பஸ்களிலும் மற்றும் ரயில்களிலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் அனுமதிக்கப்படுவதால், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் போது அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயணங்களை மட்டுப்படுத்துமாறு அமைச்சர் மகிந்த அமரவீர பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.