fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பஸ் மற்றும் ரயில் சேவை நாளை ஆரம்பம்….

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2020 14:00

ரயில் போக்குவரத்து சேவை நாளை முதல் முழுமையாக வழமைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதற்கமைய, 49 அலுவலக ரயில்களுடன் பொதுவான பயணிகள் ரயில்களும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இரவுநேர தபால் ரயில் சேவையும் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில் முன்பதிவிற்கு அமைய பயணிகள் சேவையை நடத்துவது தொடர்ந்தும் சாத்தியம் இல்லை. ரயிலில் அதிகளவான மக்கள் பயணிப்பதே இதற்கு காரணமாகும். இதனால் நாளை முதல் ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதில் பயணிகள் கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கான சுகாதார வசதிகளை வழங்குவதற்கான செயற்பாடுகள் ரயில் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

இதேவேளை, கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் கடுகதி ரயில் மற்றும் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி புறப்படும் கடுகதி ரயில் பயணங்கள் இடம்பெறமாட்டாது என ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை முதல் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் அனைத்தும் சேவையில் ஈடுபடுமென சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டில் கொவிட் 19 தொற்று பரவுவதற்கு முன்னர் காணப்பட்டதை போன்று பஸ் போக்குவரத்து சேவைகள் நாளை முதல் மீண்டும் இடம்பெறுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2020 14:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo