வங்காள விரிகுடாவை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக அடுத்து வரும் சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யலாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
(நாட்டின் சில பகுதிகளில் அடை மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கமே இதற்கு காரணம். இதனால் நாட்டில் கடும் காற்று வீசும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே அடுத்து வரும் சில நாட்களில் மழை பெய்யலாம். வடமேல், மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் எவ்வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான ஆழ்கடல் பகுதியிலும் மழை பெய்யும். அத்துடன் புத்தளம் முதல் காங்கேசன்துறை ஊடாக திருமலை வரையிலான கடற்கரை பகுதியிலும் காலி முதல் மட்டக்களப்பு வரையிலான கடற்கரை பகுதியிலும் காற்று வேகமாக வீசும்.)
இதேவேளை, புத்தளம் நகரில் வீசிய கடும் காற்று காரணமாக புத்தளம் புனித அன்ரு ஆரம்ப பாடசாலையின் கட்டிடங்களின் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நேற்றைய தினம் இப்பகுதியில் அடை மழை பெய்துள்ளதுடன் இன்று வீசிய கடும் காற்றினால் இவ்வாறு பாடசாலைக்கு கடும் சேதம் ஏற்பட்டது.