கல்கிசை கடற்கரையில் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் குப்பைகூழங்கள் குவிந்து காணப்படுவதாக வன அருன அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதுவொரு திட்டமிட்ட செயலாக இருக்கலாமெனவும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளதுடன் இது குறித்து பூரண விசாரணையொன்றை நடத்துமாறு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
(கல்கிசை கடற்கரை எங்கும் தற்போது குப்பை கூழங்களாக காணப்படுகின்றன. திடீரென இவ்வாறு பெரும்மளவு குப்பைகள் ஒதுங்கியமை தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு ஐயம் ஏற்பட்டுள்ளது. மொரட்டுவை மாநகர சபையே இக்குப்பைகளை கொட்டிருக்கலாமென சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் இதற்கு மாநகரசபை மேயர் சமன் லால்பெர்னாண்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். )