திங்கள் முதல் பொது போக்குவரத்து சேவை சாதாரணமுறையில்
Related Articles
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு, திங்கட்கிழமை முதல் பொதுப்போக்குவரத்து சேவையை சாதாரணமுறையில் நடத்திச்செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அனைத்து ரயில்களும் சேவையில் ஈடுபடவுள்ளன. தனியார் பஸ்களின் சேவைகளையும் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, பாடசாலை போக்குவரத்து பஸ்கள் சுற்றுலா மற்றும் யாத்திரிகைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பஸ்கள் மற்றும் பதிவு செய்யும் ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ள பஸ்கள் தற்காலிகமாக பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும்.
பஸ்கள் மற்றும் ரயில்களில் காணப்படும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் அனுமதிக்கப்படுவதால், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் போது அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயணங்களை மட்டுப்படுத்துமாறு அமைச்சர் மகிந்த அமரவீர பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார வழிமுறைகளையும் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.