fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றாடலின் அழிவு மனிதனின் எதிர்கால இருப்புக்கு சவால் என்கிறார் ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2020 14:47

உலக சுற்றாடல் தினத்திற்கு இணைவாக இலங்கையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. ‘உயிர் பல்வகைமை – இயற்கைகான இடம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சுற்றாடல் தின நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

மரநடுகை வேலைத்திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். எதிர்கால பரம்பரைக்கு சுற்றாடல் தொடர்பில் விரிவான தெளிவுப்படுத்தல்களை பெற்றுகொடுப்பதற்கான அவசியத்தை தற்காலத்தில் உணரக்கூடியதாக உள்ளதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு மனித செயற்பாடுகளின் நேரடி விளைவுகள் காரணமாக சுற்றாடலுக்கு பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. சுற்றாடலின் அழிவு மனிதனின் எதிர்கால இருப்புக்கு சவாலாக அமைந்துள்ளது. இதனால் தனது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிரந்தர சுற்றாடலுக்கான தேவையுடன் தொடர்புடைய விடயங்களை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றவுள்ளதாக ஜனாதிபதி குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 5, 2020 14:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க