ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,490 பேர் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 498 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதுவரை மொத்தமாக 70,042 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 19,856 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்களில் 25,942 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.