கொட்டகலை – பொரஸ்கிறிக் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 10 பெண் தொழிலாளர்கள், இன்று கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்தவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்கான 10 பேரும் தொடர்ந்தும் வைத்தியசலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.