fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முழு அமெரிக்காவும் பற்றி எரியும் நிலையில் கொலை செய்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2020 15:21

அமெரிக்க வெள்ளையின பொலிஸ் அதிகாரி ஒருவரினால் ஜோர்ஜ் பிலோயிட் என்ற நிராயுதபானி கறுப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கொலையாளியான பொலிஸ் அதிகாரிக்கு எதிராக கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் ஏனைய அதிகாரிகள் கொலைக்கு உதவியதாக குறு;றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அடிப்பயைடாக வைத்து அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு சட்டத்தையும் அபொருட்படுத்தாது தொடர்ச்சியாக எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. கொவிட் 19 வைரஸ் பரவல் மற்றும் ஆர்பாட்டங்களை கட்டுப்படுத்தும் விடயத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் செயற்பட்ட விதம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இவ்வாறான பின்புலத்தில் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் பிலோயிடின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் நேற்றைய தினம் மதல் மறையாக ஊடகங்கள் முன்னிலையில் தோன்றியிருந்தனர்.

இதன் இடையே எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் காரணமாக வெள்ளை மாளிகையை சூழ இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளமையை வெளிநாட்டு ஊடகங்கள் நேற்று சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்கு மேலதிகமாக வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்கள் மிது மேற்கொள்ளும் துன்புறுத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுவதும் பல நாடுகளில் எதிர்ப்ப நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2020 15:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo