போலந்து நாட்டில் இம்மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 28 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
போலந்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்நாட்டில் 24 ஆயிரத்து 687 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களில் ஆயிரத்து 115 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் புதிதாக அடையாளம் காணப்படும் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. அதற்கமைய சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.