fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2020 14:21

நாட்டில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தப்படுத்தி கிருமி நாசினியை தெளிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை யால, பருவ நெற் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் நிலையில் பல்வேறு பகுதிகளிலும் எலிக்காய்ச்சல் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எலி, பெரிச்சாலி, எருமைமாடு என்பவற்றால் எலிக்காய்ச்சல் பக்றீரியா பரவும் என கண்டறியப்பட்டுள்ளது. நெல் வயல்கள் போன்ற நீர் அதிகம் கொண்ட பகுதிகளில் குறித்த பக்றீரியாக்கள் அதிகளவில் காணப்படும். மனிதர்களில் உடலில் காணப்படும் வெட்டுக்காயங்கள், கீறல்கள் மற்றும் கண், வாய் உள்ளிட்ட உறுப்புகளின் ஊடாக குறித்த பக்றீரியாக்கள் உடலுக்குள் நுழையும் எலிக்காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக திடீர் காய்ச்சல், தொண்டை புண், தசை வலி மற்றும் முதுகு வலி காணப்படுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கண்சிவத்தல், வாந்தி, தலைவலி, மலச்சிக்கல் மற்றும் குறைவான சிறுநீர் வெளியேற்றம் என்பனவும் நோயின் அறிகுறிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிகுறிகள் தென்படும்பட்சத்தில் உடனடியாக வைத்திய சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 4, 2020 14:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க