இன்றிரவு 10 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை முழு நாட்டிலும் ஊரடங்கு…
Related Articles
நாளை மற்றும் நாளை மறுதினத்தில் நாடெங்கும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன் பிரகாரம் இன்றிரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும்.
(நாளையும் நாளை மறுதினமும் நாடெங்கும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலிலிருக்கும். சனிக்கிழமை முதல் ஊரடங்கு சட்டமானது மறு அறிவித்தல் வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படும். தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிஸார் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் தலைமையகம் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளது. இதேவேளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் பொது போக்குவரத்து சேவைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை போக்குவரத்து பஸ்கள், தனியார் பஸ்கள், ரயில் சேவைகள் சுகாதார முறைப்படி ஆரம்பிக்கப்படும். நாளைய தினம் முழு நாட்டிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதால் அன்றைய தினத்தை அரச விடுமுறையாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபை உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது. )