fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நல்லாட்சி அரசாங்கத்தின் இரகசியங்களை அம்பலப்படுத்த நிஷங்க சேனாதிபதி இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை…

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2020 16:56

அரசியல் பலி வாங்கல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஷங்க சேனாதிபதி இன்று 3ஆவது நாளாகவும் ஆஜராகியுள்ளார். ஆணைக்குழுவில் ஆஜராகுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

(தொலைக்காட்சிகளில் காட்டுங்கள் கடற்படையினரால் ஒரு பகுதியை முன்னெடுப்பதற்கு ஏன் எங்களுக்கு வழங்கினார்கள். பணம் சம்பாதிப்பதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் எங்களுக்கு வழங்கப்பட்டதாக அவரின் பெயரிற்கு கலங்கும் ஏற்படும் வகையில் தெரிவிக்கப்பட்டது. அந்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக நான் இந்த எழுத்து மூல ஆவணத்தை வழங்கியுள்ளேன். இது தான் காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை நடத்துவதற்கு முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தை.

அர்ஜூன நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்ட கருத்தை நான் பார்த்தேன் இலாபம் பெறுவதற்காக எங்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அது முழு பொய் நான் அவருக்கு சவால் விடுக்கின்றேன். என்னோடு எந்த ஒரு இலத்திரனியல் ஊடகத்திற்கும் வந்து அவர் சொன்னதை குறிப்பிடலாம் 5 நிமிடங்களில் அவர் சொன்னதை பொய் என நிரூபித்து காட்டுவேன்.)

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2020 16:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க