அம்பாறையில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு
Related Articles
அம்பாறை மாவட்டம் ஆழையடிவேம்பு – தில்லையாற்று பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் இன்று அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.
நீரில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து குண்டு செயலழிக்கச் செய்யும் படையினர் வருகை தந்து வெடிப்பொருட்களை பாதுகாப்பாக அகற்றினர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.