fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இரும்புகரம் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கபடுவார்கள் : ட்ரம்ப் எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2020 15:34

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் ஜனாதிபதியாக தான் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கொவிட் 19 தொற்றினால் அமுலில் உள்ள ஊடரங்கையும் மீறி நிவ்யோர்க் உட்பட அமெரிக்காவின் பல நகரங்களிலும் எதிர்ப்பு பேரணிகள் இடம்பெறுகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்புகை பிரயோகம், ரப்பர் குண்டுத்தாக்குதல் மிளகு தாக்குதல் என்பவற்றையும் மேற்கொண்டுள்ளனர். இதனால் ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறியுள்ளன. எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும் பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். நாட்டில் அமைதியை நிலை நாட்டுவதற்காக தேவை ஏற்படும்பட்சத்தில் இரும்பு கரம் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கப்படுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார். இதேவேளை அமெரிக்க பொலிசாரின் தாக்குதலில் உயிரிழந்த கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்டின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2020 15:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க