fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2020 12:22

நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களாக மேலும் 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 32 பேர் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்கள் என கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் செயற்பாட்டு தலைமையகத்தின் பிரதானி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதில் 27 பேர் குவைத் இராச்சியத்திலிருந்து வந்தவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றைய தினம் பதிவான தொற்றாளர்களில் 7 பேர் கடற்படை வீரர்கள் என தெரியவந்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ஐய்யாயிரத்து 243 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 11 ஆயிரத்து 669 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 3, 2020 12:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo