சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் 41 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சர்வமத பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இன்று காலை 9 மணிக்கு இந்து மத வழிபாடுகள் தெஹிவளையிலுள்ள விஷ்ணு கோவிலில் இடம்பெற்றது. கத்தோலிக்க வழிபாடுகள் கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. நாளை மறுதினம் சுயாதீன ஊடக வலையமைப்பின் 41 வது ஆண்டு நிறைவு கொண்டாடப்படவுள்ளது.
அன்றைய தினம் பொசன் பௌர்ணமி தினமாக இருப்பதால் விசேட பௌத்த மத வழிபாடுகள் சிதுல்பௌவ்வ ரஜமகா விகாரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.