மனித செயற்பாடுகள் காரணமாக சிங்கராஜ மழைக்காட்டில் நீர் மூலங்கள் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்று சூழல் ஆய்வாளர்க்ள தெரிவிக்கின்றனர்.
(இலங்கையில் அதிகளவான இயற்கை நீர் ஊற்று இப்பகுதியியிலேயே காணப்படுகின்றது. மனிதர்களின் செயற்பாடுகளால் அவை தற்போது இல்லாது போகும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் மட்ட அதிகாரிகள் சிலர் மனிதர்களின் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
இந்த நீர் மூலங்களை பாதுகாக்குமாறு நாங்கள் கூறுகின்றோம் எமது நாட்டுக்கு உரித்தான உயிரினங்கள், தாவரங்கள் இங்கு உள்ளன இங்கு நீர் மூலங்கள் அழிக்கப்பட்டால் எமக்கு குடி நீர் பிரச்சினையும்’ ஏற்படும்.
வெயில் காலங்களில் நீர் பருக வேண்டும் என்றால் இம் நீர் மூலங்களை பாதுகாத்து தருமாறு அதிகாரிகளிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன். )
இவ்வாறு மக்கள் கோரிக்கை அதிகாரிகளிடம் விடுத்துள்ளனர்.