அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்தும் போராட்டங்கள்
Related Articles
அமெரிக்காவில் கறுப்பின நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளால் கொல்லப்பட்டதையடுத்து மோதல் நிலை அதிகரித்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்றிரவு அதிகளவான போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்ததையடுத்து குறித்த பகுதியில் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
அதனையடுத்து குறித்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதாக மாநில மேயர் அறிவித்துள்ளார். குறித்த உத்தரவால் அதிகம் கோபத்துக்குள்ளான ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்லப்பட்ட நபருக்கு நீதி வழங்கப்படவேண்டுமென தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.