fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாளிகாவத்தை துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 2, 2020 11:45

மாளிகாவத்தை லக்செவன வீட்டுத்தொகுதிக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொடஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையமொன்றுக்கு அருகிலிருந்து அவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கிரேன்பாஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதான குறித்த நபர், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் வெல்லம்பிடிய மற்றும் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுகளில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் புதுக்கடை இலக்கம் 4 நீதிமன்றில் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த 30 ம் திகதி மாலை 5 மணியளவில், மாளிகாவத்தை லக்செவன வீட்டுத்தொகுதிக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 35 வயதான நபரொருவர், காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில் கடந்த 31ம் திகதி நபரொருவர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 7ம் திகதி வரை தடுத்துவைத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 2, 2020 11:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க