சட்ட ரீதியான தடைகள் இல்லாவிட்டால் தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவிருப்பதாக அவ்வாணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.
( தேர்தல் திகதியை அறிவிப்பதற்கான சட்டரீதியான பிரச்சினைகள் எதுவும் இல்லையென்றால் தேர்தல் ஆணைக்குழு தேர்தல் நடைபெறுவதற்கான திகதியொன்றை அறிவிக்கும். பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆலோசனைகளின் பிரகாரம் முடியுமான வரையில் தேர்தலை நடத்துவதே எமது நோக்கம். தொடர்ந்தும் தேர்தலை ஒத்தி போடுவதற்கான எவ்வித தேவையும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது. தற்போது படிப்படியாக நாடு வழமை நிலைக்கு திரும்பி வருகின்றது. நிவ் நோர்மல் அல்லது ரீசனபல் நோர்மல் எனும் நிலை சமூகத்தில் ஏற்பட வேண்டும். பாராளுமன்ற தேர்தலை மட்டுமல்ல, அதன் பின்னர் நடைபெறவிருக்கும் உத்தேச மாகாண சபை தேர்தலை கூட கொவிட் 19 தொற்றுக்கு மத்தியிலேயே நடத்த வேண்டியிருக்குமென நாங்கள் நம்புகிறோம். )
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மஹிந்த தேசபிரிய இவ்வாறு தெரிவித்தார். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார். தபால்மூலம் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. சுகாதார ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடவிருப்பதால் இம்முறை தேர்தல் ஊழியர்கள் அதிகாரிகளின் தொகை அதிகரிக்கப்படவுள்ளது. இம்முறை 650கும் முதல் 700 கோடி ரூபா தேர்தலுக்காக செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனா தொற்று காரணமாக இத்தொகை அதிகரித்தாலும் கூட நிதி ரீதியான எவ்வித பிரச்சினையும் இல்லையென மஹிந்த தேசபிரிய தெரிவித்தார்.