fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிம்புவுக்கு ஜோடியாக சுருதி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 1, 2020 20:41

‘அவள் அப்படித்தான்’ படத்தை ரீமேக் செய்யப்போவதாக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அறிவித்துள்ளார். ரஜினி, கமல் இணைந்து நடித்த ‘அவள் அப்படித்தான்’ படத்தின் ரீமேக்கில் சிம்புவுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கவுள்ளனர்.

‘ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் சிம்புவையும் கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் துல்கர்சல்மான், ஸ்ரீப்ரியா வேடத்தில் சுருதிஹாசன் ஆகியோரையும் நடிக்க வைக்க விருப்பம் உள்ளது. கதையின் உயிரோட்டம் கெடாமல் இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ப மாற்றம் செய்து திரைக்கதை உருவாக்கி உள்ளேன்’ இவ்வாறு இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தெரிவித்தார்.

சி. ருத்ரையா இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்து 1978ம் ஆண்டு திரைக்கு வந்து பெரும் பாராட்டை பெற்ற கிளாசிக் திரைப்படம் ‘அவள் அப்படித்தான்.’ இந்த படத்தில் ஸ்ரீப்ரியா ஒரு தைரியமான பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ரஜினிகாந்த் விளம்பர நிறுவனம் நடத்துபவராகவும் அவரது அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக ஸ்ரீப்ரியாவும், கமல்ஹாசன் ஆவணப்பட இயக்குனராகவும் நடித்து இருந்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 1, 2020 20:41

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க