மக்களின் வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமையையடுத்து தடைப்பட்டிருந்த மலையக மரக்கறி வர்த்தக நடவடிக்கைகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
(கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டமையையடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பல்வேறு தொழிற்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மரக்கறி உற்பத்தியாளர்களும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். அரசாங்கத்தின் தலையீட்டினால் மரக்கறி வகைகளை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பி வரும் நிலையில், தமது மரக்கறி வகைகளுக்கு சிறந்த விலை கிடைக்கபெறுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்து வர்த்தகர்கள் தமது அறுவடைகளை கொள்வனவு செய்வதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில் வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை வழமைப்போன்று முன்னெடுக்கும் நிலையில் மலைநாட்டு மரக்கறி வகைகளின் விலை சாதாரணமாக உயர்மட்டத்தில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.)