நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் தளர்வு..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 1, 2020 12:23

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் எதிர்வரும் புதன் கிழமை வரை நாளாந்தம் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை காலை 4 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளாந்தம் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலத்தில் மக்கள் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய செயற்படவேண்டியது அவசியமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 1, 2020 12:23

Default