சுற்றுலா துறையை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு : சர்வதேச நாணய நிதியம்

சுற்றுலா துறையை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு : சர்வதேச நாணய நிதியம் 0

🕔17:42, 30.ஜூன் 2020

கொவிட் 19 தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் சுற்றுலா துறையை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தூதுவர்களும் இலங்கையின் சுற்றுலா துறையை மேம்படுத்துவது குறித்து நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான நிதி மற்றும் ஏனைய ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு வெளிநாட்டு தூதுவர்கள் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு

Read Full Article
முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் 0

🕔17:33, 30.ஜூன் 2020

உத்தியோகபூர்வ வாகனங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் நிர்வாகத்தினரை பொறுப்பேற்குமாறு அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் 2 ஆம் திகதியுடன் நிறைடைந்துள்ளதால்,

Read Full Article
துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பம்

துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பம் 0

🕔17:27, 30.ஜூன் 2020

ஹோமாகம – பிட்டிபன பகுதியில் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் 19 துப்பாக்கிகள் காணப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. எனினும் 12 துப்பாக்கிகளே கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ஏனைய 7 துப்பாக்கிகள் எந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் தமது

Read Full Article
“கொவிட் 19 பரவலை தடுப்பதற்கு ஒத்துழைப்பு”

“கொவிட் 19 பரவலை தடுப்பதற்கு ஒத்துழைப்பு” 0

🕔17:10, 30.ஜூன் 2020

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுக்கும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கமைய 5.8 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அமெரிக்கா நன்கொடையாக வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை பாதுகாப்பு

Read Full Article
சகல தொழிற்பயிற்சி நிறுவனங்களையும் மாணவர்களுக்காக திறக்க தீர்மானம்

சகல தொழிற்பயிற்சி நிறுவனங்களையும் மாணவர்களுக்காக திறக்க தீர்மானம் 0

🕔15:24, 30.ஜூன் 2020

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கும் சகல தொழிற்பயிற்சி நிறுவனங்களையும் ஜூலை மாதம் 6ம் திகதி மாணவர்களுக்காக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் உதவி பணிப்பாளர் அகில தனுஸ்க நாகவத்த விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 011 72 70 270

Read Full Article
ராஜித்த தாக்கல் செய்த திருத்த மனு நிராகரிப்பு

ராஜித்த தாக்கல் செய்த திருத்த மனு நிராகரிப்பு 0

🕔14:54, 30.ஜூன் 2020

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குறித்த மனுவை ராஜித்த சேனாரத்னவின் சட்டத்தரணிகள் மீள வாபஸ் பெற்ற நிலையில், நீதிமன்றம் அதனை தள்ளுப்படி செய்துள்ளது. சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகசந்திப்பு தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை கொழும்பு மேல்நீதிமன்றம் ரத்து செய்தது.

Read Full Article
பேன்ஸ்டொக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைவராகிறார்…

பேன்ஸ்டொக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைவராகிறார்… 0

🕔14:48, 30.ஜூன் 2020

இங்கிலாந்து சகல துறை வீரர் பென்ஸ்டொக்ஸ் இங்கிலாந்து அணியின் 81 வது டெஸ்ட் அணி தலைவராக செயற்படவுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் அணி தலைவராக செயற்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவது போட்டி

Read Full Article
தாய்லாந்தியில் விமான சேவைகள் நாளை முதல் மீள ஆரம்பம்

தாய்லாந்தியில் விமான சேவைகள் நாளை முதல் மீள ஆரம்பம் 0

🕔14:26, 30.ஜூன் 2020

சர்வதேச விமான சேவைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக தாய்லாந்து அறிவித்துள்ளது. நாளை முதல் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. புதிய கொரோனா வைரஸ் காரணமாக விமான சேவைகளை முன்னெடுப்பதில் பல்வேறு நெருக்கடிகள் காணப்பட்டன. எவ்வாறாயினும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய சுமார் ஆயிரத்து 441 பேர் தனிமைப்படுத்தலுக்கு..

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய சுமார் ஆயிரத்து 441 பேர் தனிமைப்படுத்தலுக்கு.. 0

🕔13:55, 30.ஜூன் 2020

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய சுமார் ஆயிரத்து 441 பேர், 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 12 மணித்தியாலங்களுக்குள் குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் சமூக இடைவெளியை பேணுதல் மற்றும பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பில்

Read Full Article
சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 377 பேர் கைது

சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 377 பேர் கைது 0

🕔13:50, 30.ஜூன் 2020

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 377 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலயத்தில் 370 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹேரோயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வர்த்தகர்கள் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோணின் ஆலோசனைக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

Read Full Article

Default