நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1620ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 62 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில், கடற்படையினர் 25 பேர், மாலைதீவிலிருந்து வந்த 3 பேர், குவைத்திலிருந்து வந்த 8 பேர், கட்டாரிலிருந்து வந்த 26 பேர் உள்ளடங்குவதாக, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது 829 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 781 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 55 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.