fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான 10 காரணங்கள்” : உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தெரிவிப்பு.

ITN News Editor
By ITN News Editor மே 30, 2020 20:08

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான 10 காரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பயங்கரவாத விசாரணை பிரிவின் உயர் அதிகாரியொருவர் இன்று தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”தெஹிவளை ட்ரொப்பிக்கல் இன் விடுதியில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட அப்துல் லத்தீப் ஜெமில் மொஹமட் தொடர்பில் 2016ம் ஆண்டு முதல் தகவல் சேகரிக்கப்பட்டு வந்ததாக குறித்த அதிகாரி தெரிவித்தார். அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் மற்றும் அவ்வமைப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்து பரிமாற்றம் மேற்கொண்டவர் என தெரியவந்துள்ளது. அவர் உள்ளிட்ட ஐசிஸ் அமைப்பின் மீது ஆர்வம் செலுத்திய 92 நபர்களின் பெயர் பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் சாட்சி சொன்னார். 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் திகதி அரச புலனாய்வு பிரிவின் அப்போதைய பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு குறித்த புலனாய்வு தகவல்கள் அனுப்பப்பட்டது என்பதையும் அவர் ஏற்றுக் கொண்டார். பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க சில்வா இவ்விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குண்டுதாக்குதல் மேற்கொள்ள முன்னர் ஜெமீல் மொஹமட் தனது மனைவிக்கு அனுப்பிய வட்ஸ்ஏப் குரல் பதிவொன்றை கண்டுபிடிக்க முடிந்ததாகவும் சாட்சி தெரிவித்தார். அந்த வட்ஸ் எப் செய்தியில், ‘பாத்திமா நீங்கள் எனக்கு கோல் பண்ண வேண்டாம், நான் அல்லாஹ் சென்ற பாதையில் செல்கிறேன்… நான் வெளிநாட்டுக்கு செல்கிறேன் என்று சொன்னது பொய்’ என பதிவாகியிருப்பதாக சாட்சி தெரிவித்தார். குறித்த குரல் பதிவை அரச பகுப்பாய்வு அதிகாரிக்கு அனுப்பி அறிக்கையொன்றை பெற்று கொள்ளுமாறு ஆணைக்குழு உத்தரவிட்டது. சாய்ந்தமருது குண்டுவெடிப்புக்கு பின்னர் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வீடியோ காட்சியின் மூலம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான விடயங்கள் பல தெரியவந்ததாக சாட்சி மேலும் சொன்னார். குறித்த வீடியோ காணொளி கல்கிஸ்ஸை மாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.”

இதேவேளை கண்டியில் ஊடகவிலாளர்களிடம் கருத்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரியவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமென தெரிவித்தார்.

கேள்வி : உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நியாயம் நிலைநாட்டப்படவில்லையென அதி மேற்றானியார் தெரிவித்துள்ளார்.

பதில் : இவ்விடயத்தில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. மேலோட்டமாக விசாரணை நடத்தி இரண்டொருவருக்கு தண்டனை வழங்குவதால் எவ்வித பயனும் இல்லை. இதன் பின்னணியை கண்டுபிடிக்க வேண்டும். அண்மையில் பேஸ்புக்கில் மீண்டும் ஒரு தாக்குதல் இடம்பெற போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது, தற்போது நாங்கள் குறித்த நபரை கைது செய்து விசாரித்து வருகிறோம். நாங்கள் தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

ITN News Editor
By ITN News Editor மே 30, 2020 20:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க