fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

‘தன்னிலை விளக்கமளிக்க 7 நாள் கால அவகாசம்’

ITN News Editor
By ITN News Editor மே 30, 2020 19:48

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டோருக்கு தன்னிலை விளக்கமளிக்க 7 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தவிசாளர் கபீர் ஹாஷிம் நேற்று இடம்பெற்ற செயற்குழு கூட்டம் சட்ட விரோதமானது என தெரிவித்துள்ளார்.

”ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த சஜித் பிரேமதாச உள்ளிட்ட 99 பேரை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலக்குவதற்கு கட்சி தலைமைத்துவம் மேற்கொண்ட தீர்மானத்தை அக்கட்சியின் செயற்குழு ஏகமானதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து கட்சி செயற்குழுவுக்கு புதிதாக ஏழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். சந்தீப் சமரசிங்க, ஆஷூமாரசிங்க, பாலித்த தெவரப்பெரும, நாலக்க கொலன்னே ஆகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சாந்தினி கோன்கஹவே, சானக்க இலேபெரும மற்றும் அஸ்மி காசிம் ஆகியோரும் செயற்குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் பிரதி தலைவர் பதவி வகித்த சஜித் பிரேமதாச அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், கட்சியின் உப தலைவராக பதவி வகித்த ரவி கருநாணாயக்க மற்றும் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க ஆகியோர் தொடர்ந்தும் அப்பதவியை வகிக்கின்றனர்.

இதேவேளை ஹிருணிகா பிரேமசந்ர, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எஸ்.எம். மரிகார், முஜிபுர் ரஹ்மான், ஹர்ஷன ராஜகருணா, காவிந்த ஜயவர்தன, ரஞ்ஜன் ராமநாயக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அஜித் பி பெரேரா, லக்ஸ்மன் கிரியெல்ல, ரஞ்சித் அலுவிஹாரே, வசந்த அலுவிஹாரே, விஜயபால ஹெட்டியாராச்சி, பந்துலால் பண்டாரிகொட, கயந்த கருணாதிலக்க, மங்கள சமரவீர, புத்திக்க பத்திரன, சஜித் பிரேமதாச, ஜே.சி அலவத்துவல, அஷோக் அபேசிங்க, ஹெக்டர் அப்புஹாமி, நிரோஷன் பெரேரா, பி.ஹெரிசன், சந்ராணி பண்டார, வடிவேல் சுரேஷ், தலத்தா அத்துகோரள, ஹரின் பெர்ணான்டோ, இரான் விக்ரமரட்ன, ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு விலக்கப்பட்ட 99 பேரில் சிலராவர்.

செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் சஜித் பிரேமதாச தலைமைத்துவத்துக்கு பொருத்தமான நபர் அல்லவென என தெரிவித்தனர். “

ITN News Editor
By ITN News Editor மே 30, 2020 19:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo