fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்கு சட்டம்

ITN News Editor
By ITN News Editor மே 30, 2020 19:39

நுவரெலியா மாவட்டம் முழுதும் இன்று ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டிலும் நாளை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

”நுவரெலியா மாவட்டத்தில் குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை முழு இலங்கையிலும் அமுல்படுத்தப்படும் வகையில் ஊரடங்கு செயற்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜூன் முதலாம் திகதி முதல் ஜூன் 3ம் திகதி வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் முன்னரை போலவே இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுல்படுத்தப்படும். ஜூன் நான்காம் திகதி வியாழக்கிழமையும் ஜூன் 5ம் திகதி வெள்ளிக்கிழமையும் ஊரடங்கு அமுலில் இருக்குமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜூன் ஆறாம் திகதி சனிக்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 30, 2020 19:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க