சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு கிரேக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 29 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தமது நாட்டிற்கு வர முடியுமென கிரேக்கம் குறிப்பிட்டுள்ளது. எனினும் குறித்த நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா இடம்பெறவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜேர்மன், ஒஸ்ட்ரியா, டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கிரேக்கத்திற்கு வர முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை 29 நாடுகள் அடங்கிய பட்டியலில் மேலும் சில நாடுகளை இணைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கிரேக்க சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.