பாகிஸ்தானில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பான்மையான சிறுவர்கள் 10 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் தென்பகுதியிலுள்ள சிந்த் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது அதிகளவான சிறுவர்கள் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பலரிடம் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லையென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாகிஸ்தானில் ஊரடங்கு சட்டம் அண்மையில் தளர்த்தப்பட்டது. எனினும் கொவிட் 19 தொற்று அதிகரித்துள்ளதால் மீண்டும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.