fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நிர்க்கதியாகியிருந்த 304 இலங்கையர்கள் நாட்டிற்கு

ITN News Editor
By ITN News Editor மே 30, 2020 12:18

அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் நிர்க்கதியாகியிருந்த இலங்கையர்கள் 304 பேர் இன்றைய தினம் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான இரு விமானங்களின் ஊடாக அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தியாவின் மும்பை நகரிலிருந்து இலங்கை முப்படையைச் சேர்ந்த 18 பேருடன் யு.எல்.1042 என்ற விசேட விமானம் இன்று அதிகாலை 4.45 க்கு விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதேவேளை யு.எல்.605 விமானத்தின் மூலம் வருகை தந்த 286 இலங்கையர்களும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வருகை தந்த அனைவரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 30, 2020 12:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க