fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor மே 30, 2020 11:56

உலக சுகாதார ஸ்தாபனத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள அனைத்து தொடர்புகளையும் ரத்து செய்யவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்று பரவலுக்கு சீனாவே காரணமென அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென சீனாவிற்கு அழுத்தம் கொடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் தவறியுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு நிதி வழங்கும் நாடுகளில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது.

வருடாந்தம் சுமார் 400 மில்லியன் டொலர்களுக்கும் அதிக நிதியை அமெரிக்கா, உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 30, 2020 11:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க