fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமரர் ஆறுமுகம் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் நுவரெலியாக கொட்டகலவில் பல்கலைக்கழகம்..

ITN News Editor
By ITN News Editor மே 28, 2020 19:37

காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் நுவரெலியாக கொட்டகல பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்று விரைவில் நிர்மாணிக்கப்படுமென அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இவ்வூடக சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையில் அடிப்படைவாதத்திற்கும் இனவாதத்திற்கும் எதிராகவும் இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்காகவும் குரல் எழுப்ப முடியாத மக்களுக்காக குரல் எழுப்புவதற்காக அளவற்ற பங்களிப்பை வழங்கிய ஒரு அரசியல் தலைவராக நாங்கள் அமைச்சர் தொண்டமானை மதித்து வந்தோம். அவர் மரணிப்பதற்கு சில மணித்தியாலயத்துக்கு முன்னர் பிரதமரை சந்தித்தார். மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான ஆலோசனைகள் மற்றும் தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பிரதமரிடம் கலந்துரையாடினார். அவர் அண்மையில் அமைச்சராக பதவியேற்ற பின்னர் நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கவேண்டுமென கூறினார். அவர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைத்து தர வேண்டுமென அவர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தார். சந்ததென்ன பகுதிக்கு விசேட பல்கலைக்கழகம் ஒன்றையும் அம்பேவல பகுதியில் உயிரியல் கட்டமைப்பு தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்றையும் கொட்டகலை பகுதிக்கு தேசிய பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கும் அமைச்சரவை மட்டத்தில் கலந்துரையாடி இறுதி தீர்வுகள் எட்டப்பட்டிருந்தது. இதனையொட்டி அடுத்தவாரம் அமைச்சரவை பத்திரம் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அவரை கௌரவிக்கும் வகையில் நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலையில் அவர் மரணமடைந்து ஓராண்டு பூர்த்தியடையும் தினத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படுமென்பதை குறிப்பிட விரும்புகிறேன். “

ITN News Editor
By ITN News Editor மே 28, 2020 19:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க