fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்காக விசேட செயலணி

ITN News Editor
By ITN News Editor மே 28, 2020 13:20

டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்காக விசேட செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்தார். கொவிட் 19 நோய்த்தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்ததைப் போன்று டெங்கு நோயிலிருந்தும் நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பு சுகாதார துறையினருக்கு உண்டு. தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக சுகாதார பிரிவினர் அர்ப்பணிப்புடன் செயற்படுவர். கடந்த வருடம் டெங்கு நோய் தாக்கம் காரணமாக 150 பேர் பலியாகினர். இவ்வருடத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக செயலணியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 நோயை கட்டுப்படுத்துவதற்காக நாட்டு மக்கள் வழங்கிய ஒத்துழைப்பை போன்று டெங்கு நோயைகட்டுப்படுத்தவும் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சுற்று சூழலை டெங்கு நோய் பரவாத விதத்தில் பேண வேண்டும். பொதுமக்கள் தமது சொந்த இடங்களையும் பொது இடங்களையும் டெங்கு நோய் பரவாத விதத்தில் பேணுவது அவசியமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 28, 2020 13:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க