fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ராஜித்த பிணை மனு மீதான விசாரணை மற்றுமொரு நிதிமன்றத்திற்கு மாற்றம்

ITN News Editor
By ITN News Editor மே 27, 2020 13:25

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்தனவின் பிணை மனு மீதான விசாரணையை மற்றுமொரு நிதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரின் பிணை மனு விசாரணையை 2ம் இலக்க நீதவான் நிதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று பிறப்பித்தார்.

இன்றைய தினம் மனு மீதான விசாரணை இடம்பெற்ற போது சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை. அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா பிணை மனுவை மன்றில் சமர்ப்பித்தார். இதன்போது, குறித்த மனுவை வேறு நீதிமன்றமொன்றில் விசாரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு குறித்த முறைப்பாடு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப்ப பீரிஸ் நீதவானிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கமையவே பிணை மனு மீதான விசாரணையை மற்றுமொரு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 27, 2020 13:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க