வெல்லம்பிட்டிய களஞ்சியசாலையில் தீ விபத்து..!
Related Articles
கொழும்பு – வெல்லம்பிட்டியவில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ பரவல் இன்று நண்பகல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மேலும் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.