fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாணவர்களின் பாதுகாப்பு 100% உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்..!

ITN News Editor
By ITN News Editor மே 25, 2020 17:51

மாணவர்களின் பாதுகாப்பு நூறு வீதம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் நாளை தினம் இடம்பெறுமென மாத்தறையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

‘பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட பின்னரே கொவிட் 19 வைரஸூக்கு எதிரான போராட்டம் ஆரம்பமாகியது. ஆகவே பாடசாலைகளை ஆரம்பித்து Jவிட்டால் அப்போராட்டத்தை நிறுத்த வேண்டும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகளிடம் நாளை தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நூற்றுக்கு நூறு வீதம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நாங்கள் பாடசாலைகளை ஆரம்பிப்போம்.’ என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 25, 2020 17:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க