செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பும் திட்டத்தை ஜுலை மாதம் செயற்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்புவதை சீனா நீண்டகால திட்டமாக கொண்டுள்ளது.
தொலைக்கட்டுப்பாட்டு ரொபோவுடன் விண்கலம் செவ்வாய்க்கு பயணிக்கவுள்ளது. அதனை செவ்வாய் கோளின் மேற்பகுதியில் தரையிறக்க சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். குறித்த திட்டத்திற்கென பல பில்லியன் அமெரிக்க டொலர்களை சீன அரசாங்கம் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.