fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம்

ITN News Editor
By ITN News Editor மே 24, 2020 19:54

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 19,000 இற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் மிகுந்த அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களே மிகவும் அபாயமுள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

வளவில் தேங்கும் கழிவுகள், குட்டை, பழைய டயர், இளநீர் கோம்பைகள், தகர டப்பாக்கள், கண்ணாடி குவளைகள் மற்றும் பற்றைகள் புதர்கள் என்பவை டெங்கு நுளம்பு உருவாக்கத்திற்கான ஏதுவான சூழல் என அடையாளப்படுத்தி, அவற்றை அப்புறப்படுத்தி சூழலை சுத்தமாக வைத்திருக்கமாறு தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor மே 24, 2020 19:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க