fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நெசவு தொழிற்துறையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் ஆலோசனை

ITN News Editor
By ITN News Editor மே 24, 2020 12:46

நெசவு தொழிற்துறையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். விஜேயராமயிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே அது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நெசவு தொழிற்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் தொழிற்துறையாளர்கள் கலந்துரையாடி கருத்துக்களை பரிமாறினர். அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கமைய வங்கி கடன் வசதிகளை பெற்றுக்கொள்ளல், கடனை மீள செலுத்துவதற்கான நிவாரண காலத்தை நீடித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. துணி உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறுபிரதமர் நிதியமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 24, 2020 12:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க