fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நீர்க்கட்டணம் தொடர்பான செய்தி..!

ITN News Editor
By ITN News Editor மே 23, 2020 18:11

2020 பெப்ரவரி மாதத்தில் இறுதியாக தங்களுக்கு கிடைத்த நீர்க்கட்டண பட்டியலிலுள்ள கட்டணத்துக்கு சமமான தொகையை மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கும் செலுத்துமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்ட காலத்தில் நீர்மானி வாசிப்பாளர்கள் வீடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டது. இதனால் நீர்கட்டணப் பட்டியல்களை தயாரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறித்த தீர்மானத்தை நடவடிக்கையை எடுத்துள்ளதாக சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நீருக்கான கட்டணங்களை விடவும் கூடுதலாகவோ, குறைவாகவோ நீர்பாவனை செய்யப்பட்டிருந்தால் குறித்த கட்டணங்கள் 6 மாத நீர்க்கட்டண கணக்கில் இருந்து நிவர்த்தி செய்யப்படும். இதனால் தாமதக் கட்டணம் அறவிடப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நீர் கட்டணம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பின் 1939 என்ற இலக்க தொலைபேசியூடாக தொடர்பு கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 23, 2020 18:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க