fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட மலேசிய பிரதமர்..!

ITN News Editor
By ITN News Editor மே 23, 2020 18:04

கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக, மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பிரதமரின் அலுவலக சந்திப்பில் கலந்துகொண்ட அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரும் தற்போது 14 நாட்களுக்கு தனித்திருக்க நடவடிக்கை எடுத்துள்ளார். கொரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனையில் பிரதமருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

எனினும், பாதுகாப்பு கருதி அவர் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நடத்தப்படும் அனைத்துக் கூட்டங்களிலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மலேசியாவில் நாடு தழுவிய ரீதியில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய முடக்கநிலை, எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 23, 2020 18:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க