CID மற்றும் TID தலைமைகளில் மாற்றம் – பொலிஸ் அதிகாரிகள் பலரின் பதவிகளிலும் மாற்றம்..
11 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அறுவர் உள்ளடங்குவதாக பொலிஸ் தலமையகம் தெரிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுக்கு அமைய குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் அத்தியகட்சகர்கள் மூவரும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 2 உதவி பொலிஸ் அத்தியகட்சகர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலமையகம் தெரிவித்துள்ளது. சேவையின் தேவை கருதி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/05/Media-on-2020.05.22-at-2040-page-001.jpg”]