fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தானில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 : இருவர் உயிருடன் மீட்பு (VIDEO)

ITN News Editor
By ITN News Editor மே 23, 2020 12:30

பாகிஸ்தானில் கராச்சி நகரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் கராச்சி விமானநிலையத்தில் தரையிறங்குவதற்காக பயணித்த எயாபஸ் எ.320 என்ற பயணிகள் விமானம் கராச்சி நகரின் சங் மாநிலத்தில் பயணிக்கும் போது விபத்துக்குள்ளானது. குடியிருப்பு தொகுதி ஒன்றின் மீது விமானம் வீழ்ந்துள்ளது. தரையிறங்குவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்னரே விமானம் விபத்தை சந்தித்துள்ளது.

விபத்தின்போது விமானத்துக்குள் 8 ஊழியர்கள் உட்பட 99 பேர் பயணித்துள்ளனர். லாகூரில் இருந்து கராச்சி நோக்கி பயணித்த குறித்த விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் பாகிஸ்தான் நாட்டவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற பகுதியில் குடியிருப்பு தொகுதி சேதமடைந்ததால் அங்கு மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள தெரிவித்துள்ளன.

விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தானில் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை முதல் உள்ளூர் விமான சேவைகள் பாகிஸ்தானில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 23, 2020 12:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க